பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 181 ேேழ கொட்டிய கோட்டுப் பூக்கள்போல் புறாக்கள் குதித்துக்கொண்டு கூட்டைவிட்டு வெளியே வந்தன. இருநிலா இணைந்துபாடி இரையுண்ணுவதுபோல் இணைப்புறாக்கள் திகழும். செவ்விதழ்கள் விரியாத தாமரைபோல் இணைப்புறாக்கள் விளங்கும். மெல்லிய பெண்கள் கருங்கொண்டை நிறத்திலும் கட்டி ஈயமாம் காயாம்பூக் கொத்தின் நிறத்திலும், வாழைப்பூ நிறத்தி லும் புறாக்கள் உலவின. இவை உயிருள்ள அழகின் மேய்ச்சலாம். புறாக்கள் வட்டமாகக் கூடியே தமக்குக் கிடைத்த இரையினைக் கூட்டுண்ணும், அவைகளின் வாழ்வில் வெட்டுமில்லை; குத்துமில்லை; வேறு வேறாக இருந்து இரையுண்ணும் பழக்கமில்லை. கீழ்மேல் என்று தம்முள் இனம் பிரித்துக் கொண்டு பிரிந்து வாழும் பேதைமை இல்லை. இது புறாக்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும். இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில் வெட்டில்லை; குத்து மில்லை; வேறுவே றிருந்த ருந்தும் கட்டில்லை; கீழ்மேல் என்னும் கண்மூடி வழக்க மில்லை. புறாக்களின் நடையழகு காணக்காண மகிழ்ச்சிதரும். உலக மன்னர்க்கு நடை கற்பிக்கும் பாங்குடையது. புறாவின்ஒேழுக்கமும் பாராட்டற்பாலது.