பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I82 பாரதியும் பாரதிதாசனும் ஒரு பெண் புறா தனக்குரிய ஆண் புறாவினையே அவாவி நிற்கும். ஒரு பெண்புறா மத்தாப்பின் ஒளிகாட்டி வேறோர் ஆண்புறாவை மயக்கினாலும், அவ்வாண்புறா அப்பெண்புறாவினைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. இணைப்புறாக்களில் ஒன்று இறந்து போனால் தான், இருக்கும் ஒரு புறா மற்றொரு புறாவினை நாடும். ஒருபெட்டை தன்ஆண் அன்றி வேறொன்றுக் குடன்ப டாதாம்; ஒருபெட்டை மத்தாப்பைப்போல் ஒளிபுரிந் திடநின் றாலும் திரும்பியும் பார்ப்ப தில்லை வேறொரு சேவல் தம்மில் ஒருபுறா இறக்திட் டால்தான் ஒன்றுமற் றொன்றை நாடும்! ஒருசில புறாக்கள் தவறுதலாகத் தவறி நடக்கும் சில மனிதர்களிடமிருந்து ககாத பாடத்தைக் க ற்றுக்கொண்டு விட்டனவாம். பெண்புறா வருந்தும் வண்ணம் தவறிழைக் கும் ஆண்புறா அப் பழக்கத்தைக் கவலை மிக்க மக்களிட மிருந்தோன் கற்றுக் கொண்டிருக்கவேண்டும். தலை தாழ்த்திக் குடுகுடென்று ஓடி வந்து தன்னைசி சுயறு ஆண்புறாவைக் கொலை பாய்ச்சும் கண்ணால் பெண்புறா திரும்பிப் பார்த்து இங்கு வr என்றழைக்கும். மலைகாட்டி அழைத்தாலுந்தான் மையல் உற்றார் மறுப்பாரோ? தாய் இரையுண்டு கூட்டிற்குச் சென்று அங்கு வதியும் தன் குஞ்சுகளின் வாயில் அவ்விரையைச் செலுத்தும். குஞ்சு தாயின் வாய்க்குள் தன் மூக்கை வைக்கும். தாய் தான் சாப்பிட்டதைக் கக்கித் தன் குஞ்சின் குடல்