பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ß.rurr. 183 நிரப்பும். தாய் ஊட்டி, ஒய்ந்ததும் தந்தை ஊட்டும். இவ்வாழ்க்கை அன்பிற்கோர் அடையாளமான வாழ்க்கை யாகும். தாய்இரை தின்ற பின்பு தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு வாயினைத் திறக்கும்; குஞ்சு தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத் தாய்அருங் தியதைக் கக்கித் தன்குஞ்சின் குடல்கி ரப்பும்: ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்! அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்! மயற்புறா படம் விரித்து மார்பினை முன்னே உயர்த்தும். கூத்து நூல் சொல்லியவண்ணம் கால்களைத் தாக்கி அடைவு போடும். மயில்புறா னெண்சங்கு நிறமுடையதாகும். அதன் தோகை, தந்த விசிறி போன்றதாகும். வானத்திற் சுழற்றிய கூர்னாள் போலப் புறாக்கள் கூட்டமாய்ப் பறந்துபோகும். இவ்வாறு உரிமையுடன் வானிற் பறந்து திரிபவை மாலை நேரத்திற் கொத்தடி மைகள் போலக் கூட்டை வந்தடையும். வேலன் கூட்டினை வந்து சாத்தினான். வண்ணம் குழைத்துத் இட்டப்பட்ட ஒவியம் திரையிட்டு மறைக்கப்பட்டுவிட்டது. கிளி காண்பவர் கண்களையும் கருத்தையும் ஒருங்கே கவர்வது கிளி. அக் கிளியைக் கவிஞர் காணும் திறனை இவண் காணலாம்.