பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꭵ86 . பாரதியும் பாரதிதாசனும் இருள் இறைவன் படைப்பில் எதுவுமே வீணாகப் படைக்கப் பட்டதில்லை. வெயிலின்றேல் நிழல் அருமையைத் துய்க்க முடியாது. அதுபோல் ஒளியின் பெருமையினை அறிய இருள் துணை செய்கிறது. ஆடி ஓடி வாடி அலுத்துப் போய் இருக்கும் வைய மக்களை ஒடி அணைக்கிறது இருள். விண் முதல் மண் வரை இருள் தன் ஆட்சியினைப் புரிகிறது. இருள் அடிக்கடி உடை மாற்றம் செய்கிறது. பகலில் தங்கச் சேலையும், இரவில் வெண்பட்டுச் சேலை யும் உடுத்தி நிற்கிறது. கதிரவன் இருட்டை ஒழிக்க வைகறையில் எழுந்து புறப்பட்டான். ஆயினும் நீர் நிலைகளில் இருள் என்றும் செறிந்து கிடக்கின்றது. அதில் கதிரவன் சுழலும் வண்டாகத் துலங்குகின்றான். திருடரை வெளிப்படுத்துவது இருட்டு, பிள்ளைகள் துங்கினார்கள். பெண்டாட்டி அருகில் நின்றாள். கணவன் உள்ளம் எதிலும் ஒட்டாமலிருந்தது. இருள் தன் கொண்டையில் நிலவாகிய பூவைச் சூடி நின்றது. அதனைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன். நீ வானோடு பிறந்தாய். கடலில் தோன்றும் மீன் போல் உயிர்க்குலங்கள் முகிழ்த்தன. எவ்விடத்தும் இருளே நீ நிறைந்தாய், ஒருபொருள் உண்டெனில் நிழலிருப்பதும்நிேச்சயம் வோல் நீ துலங்குகின்றாய். நீ பானையின் உள் இருப்பாய்; பாலின் அணுக்கள்தோறும் பரந்திருப்பாய்.