பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&.d.mrr. 187 உயர்ந்துள்ள அழகான மூக்கின் இருபுறச் சரிவில் இலங்குவாய், அழகு நங்கையின் விழிக்கடையில் விளங்குவாய். காதின் நடுப்புறத்திலும் பக்கத்திலும் சூழ்ந்திருப்பாய் பெண்களின் முகத்திலும் அடையாளம் பொறிக்கும் இருளே, உன் பெருமையினை ஒவியரே அறிந்திருப்பர். தாமரைப் பூவின் அடிப்புறத்தில் இருள் படர்ந் திருக்கும். பூவின் பசையான இதழ்களில் நீ துலங்கு கின்றாய். நீ இல்லையெனில் தாமரைக்கு அழகு ஏது? எல்லாப் பொருள்களையும் அடுத்திருக்கும் இருளே! அனைத்துப் பொருளினுள்ளும் அழகாக நீ துலங்கு கின்றாய். அறிவெனப்படுவது ஒளியாகும். அ றி யா ைம இருளாகும். அறியாமை அறிவுதேட வற்புறுத்தும். தேள் இரவில் சிறுவனைத் தீண்டியது. விளக்கு வேண்டும். விளக்கேற்ற நெருப்புக் குச்சியைத் தேடினார்கள் சிலர்; கிடைக்கவில்லை. பெட்டியில் நெருப்புப் பேட்டியிருப்ப தாகப் பேசினர்; பெட்டிச் சாவி இல்லை. இதற்குள் சிறுவனைக் கொட்டிய தேள் மேலும் எட்டுப் பேரைக் கொட்டிவிட்டது. கட்டாயம் துரப்மை வேண்டும்" என்னும் உண்மையினைக் கற்றுத்தந்த இருளே உன் பெருமைதான் என்னே! என்கிறார் கவிஞர். இவ்வாறு இருளையும் வருணிக்கும் திறம் பெற்ற இணையிலாப் புலவராகப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் துலங்கு கின்றார். - சிற்றுார் சிற்றுார் நாட்டின் செல்வம்; உயிர் நாடி, அதனை வருணிக்கிறார் கவிஞர்.