பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I88 பாரதியும் பாரதிதாசனும் நெடுஞ்சாலை வழிச்சென்று பின்னர் ஒரு முடுக்கை அடைந்து, ஒர் ஒற்றையடிப்பாதை கண்டு, அங்கு ஆலமரத்தின் கீழ்க் கன்றுகாலிகளை மேய்க்கும் இடைச் சிறுவனைக் கண்டேன். அவன் என்னை எந்த ஊர்: என்று கேட்டான். புதுச்சேரி என்று, போகும் வழியினைக் கேட்டேன். இதைத் தாண்டிப் பழஞ்சேரி சென்று, ஒதியஞ் சாலை யோடு போனால் ஓணான் பச்சேரி வாய்க்கால் கடந்து புதுச்சேரியினை அடையலாம் என்றான். அங்குப் பசுக்கள் புல் மேய்ந்து கொண்டிருக்கும். ஆயன் பண்ணிசைத்துக் கொண்டிருப்பான். மந்தையை அடுத்து இரு பக்கத்திலும் வரிசையாய் அணிவின் வால்போல் சோளக்கொல்லை அமைந்திருந்தது. வேலிக்குள் கள்ளிமரம் தழைத்து இருந்தது. வெந்தயச் செடிகளின்மேல் தங்கப் பூக்கள் மின்னின. முற்றிய கனிந்த குலை வாழைப் பழத்தைச் சுமந்து கோண்டு வறிய மக்களே வாரும் என்று வருந்தி அழைத்தது வாழைத்தோட்டம். ஒரு காணிப் பருத்திக் கொல்லையில் நீர் பாய்ச்ச ஒர் ஆள் சிற்றோடு கையில் ஏந்தி நீர் இறைத்தான். அவன் செயல் உழைப்பொன்றே செல்வம் என்று தெரிவித்தது. குட்டையிலிருந்து தவளை ஒன்று வெளியே குதித்தது. அதனைப் பாம்பொன்று வாயிற் கவ்வி விழுங் கியது. அப் பாம்பைப் பெட்டைப் பருந்தொன்று மாய்த்துப் பெருங்கிளை கொண்டு சேர்த்துத் திண்ணத் தலைப்பட்டது. அதனைக் கண்டு திடுக்கிட்ட சிட்டுகள் ஆலமரத்தினின்று மேலெழும்பிப் பறக்கும்.