பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&. Curr. 189 முட்டை விற்பள்ை ஒருத்தி ஒருநாளும் முட்டை தின்னும் வாய்ப்புப் பெறவில்லை. உப்பு மிளகாய்சி செலவிற்கே முட்டை விற்றாள். சேரியை அடுத்துப் பெரிதான சிற்றுார்; அங்குத் தென்னை மரங்களும், மாமரங்களும் சூழ்ந்திருக்கும். தேரொன்றும் கோயிலொன்றும் சேர்ந்ததோர் வீதியுண்டு. ஒட்டுக்கூரைகள், கூண்டுவண்டி, கொட்டில் சேர்ந்த வீதி கள் ஐந்து உண்டு. ஊர் இதுவென்றாலும் நாட்டிலுள் ளோர்க்கெல்லாம் உயிர்தரும் உணவின் ஊற்றும் இது தான. - நன்செயைச் சுற்றி விாய்க்காலும், ஆற்றுநீரைப் பாய்ச்சி விளைவு விளைவிக்கும் உழவனும், அவனுக்குக் கூழும் அக் கூழுக்கு முடக்கத்தான் துவையலும் கொணர்ந்த அவன் ஆசை மனைவியும் சிற்றுாரிற் பொலி கின்றனர். - பட்டணம் சிற்றுார்க்கு மறுதலையான காட்சி வழங்குவது பட்டணம். தெருக்கள் பல; வீடுகள் பல; கண்ண வேலை. LDH" வேலையால் உயர்ந்த மாளிகைகள் பல பட்டணத்தில் பாங்குற நிமிர்ந்து நின்றன. மனிதன் எவ்வுயிர்க் குலத்திற்கும் உயர்வு சான்ற வன்; தான் அறிந்த உண்மையை உலகுக்குப் பொது வாக்கும் முயற்சியும், இடைவிடாமல் முன்னேறச் செய லைச் செய்யும் பயிற்சியும் உடையவன் என்பதனைப் பட்டணம் எடுத்துக்காட்டும். -