பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பாரதியும் பாரதிதாசனும் புகைவண்டி ஊர் நடுவில் ஒடும். பாதையில் பல வகை ஊர்திகள் ஒடும். கடலோரத்தில் கப்பல் வந்து நின்று கணக்கற்ற பொருள்களைக் குவிக்கும். மக்கள் சிட்டுப்போல் பறந்து பணியாற்றுவர். - வாணிகப் பண்டசாலைகள், அங்காடிகள், காட்சிச் சாலைகள் மனிதர் தம் கலைத்திறனைக் காட்டும். உள்ளத்தில் உள்ளதை ஏட்டில் வடிக்கும் அறிஞர்கள் கூட்டமும் கொள்கை ஒன்றிருக்க வேறு கொள்கைக்கே அடிமையாகும் வெள்ளுடை தரித்த எழுத்தாளர்கள் கூட்டமும் பட்டணத்தில் காணலாம். உண்மை, பொய் என்ற இரண்டிற்கும் வழக்காடும் வழக்கறிஞர்கள், தம் கட்சியினை எடுத்துரைக்கும் உயர்நீதி மன்றம், பொதுநலஞ் சேர்க்கும் மன்றம் ஆகியனவும் அங்கே காணலாம். நாளெல்லாம் உழைத்துச் சோர்ந்த மக்கள் மாலை யில் சாராயக் கடைக்குள் நுழைவதனையும் அங்கே காணலாம். மாலை நேரத்தில் கோழி முட்டை மரக்கறி என நுவலப்படுவதனையும் காணலாம். இயற்கையின் எழிலையெல்லாம் சி. ற் று ரி. ற் காணலாம். செயற்கையின் அழகையெல்லாம் பட்டணம் தெரியக் காட்டும். முயற்சியையும் முழுதுழைப்பையும் சிற்றுாரிற் காணலாம். பயிற்சியையும் கலையுணர்வையும் பட்டணத்திற் பார்க்கலாம். எதிர்காலத்தில் நாடு காக்கும் நல்லோராய் விளங்க இருக்கும் இளைஞர்கள் கூட்டங்கூட்டமாகசி சுவடி துரக்கிக் கல்விக் கூடங்களுக்கு ஒருநாளும் தவறிடாமல் செல்வது உவப்பைத் தருவதாகும்.