பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. curr. I9 F. நிலவிடும் நிலாமுகத்து நீலப்பூவிழி மங்கையர் கலையினில் வளர்ந்து நாட்டுக் கவிதையில் ஒளிமிகுந்து தலையாய கலைகள் ஆய்ந்து மாலையில் வீடு திரும்பினர் அதனால் அறியாமைப் பேயின் தோல் உரிந்தது. தமிழ் தமிழ் பற்றிப் பாடும்போதெல்லாம் புரட்சிக் கவிஞர்.பாரதிதாசன் உணர்வின் மையமாய்த் துலங்கக் காணலாம். மனிதத் தோற்றத்தோடேயே முகிழ்த்தது தமிழ். பறவை, விலங்கு, வண்டு, தழை, மூங்கில் இவை பாட்டிசைக்கக் கண்டு, அவற்றையொட்டி அமைக்கப் பெற்றது தமிழிசை. இன்ப எக்களிப்பில் தோன்றியது கூத்து. இயற்றமிழ் இயல்பாய்ப் பிறந்ததாகும். ஒருவரி தந்தது என்று ஒப்புதல் பெரும் பிழை. எழுத்து, சொல் கொண்டு பொருளாகி, இயல் இசை கூத்தாகித் தமிழருக்கு உயிர் தமிழாகத் துலங்குகின்றது. எவராலும் ஒழிக்கவொண்ணாமல் தலைமுறை தலைமுறையாகக் கிளைத்து வளர்ந்தது தமிழாகும். இசையினில் எண் நுட்பம் தெரிகின்றது. கல்வில் சிற்பநுட்பம் தெளிவாகின்றது. ஒவியங்கள் முதலான கலைகளைத் தந்தது தமிழ். பன்னுாறு ஆண்டுகளாகப் பழந்தமிழ் மலையின் ஊற்றாய் விளங்கியது மன்னர்தம் காப்பிலே வளர்ந்தது. அயலார் இட்ட நஞ்சாலும் அழியாமல் உயிர்க்கின்றது.