பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W.com. 17 ஆடப்போம் புனலிலெலாம் அவளே! காற்றில் அசையப்போம் பொழிலிலெலாம் அவளே! கண்ணால் தேடப்போம் பொருளிலெலாம் அவளே! கேளில் தின்னப்போம் சுவையிலெலாம் அவளே! வண்டு பாடப்போம் மலரிலெலாம் அவளே! மேற்கில் படுகதிரில் அவள்வடிவே காண்பேன் என்று வாடக்கண் துயிலாமல் இருந்தான் வேலன்; மலர்ந்திட்ட காலையிலும் அவளைக் கண்டான் -பாண்டியன் பரிசு : இயல், 76:8 காதலின் இனிய பெற்றியினை இருபெருங் கவிஞரும் ஒவ்வொரு வகையில் திறன் சேர்த்து மொழிவர்பாரதியாரின் "கண்ணம்மாப் பாட்டு" தக்க சான்றாகும். பாரதிதாசன் சேர தாண்டவம்' நூலில் உரைநடை யில் சிறக்கக் காதல் நுட்பத்தினை விளக்கி நிற்கிறார். ஆதிமந்தி : சோறும் கறியும் கொதிப்பதும் வேவதுமா யிருக்கின்றன. தோழி ஆதிமந்தி, அவரிடம் சொன்னேன் அங்கே கொதிக்கிறது என்று. இங்கே மட்டும் என்ன குளிரி கிறதோ! இங்குந்தான் என் நெஞ்சம் கொதிக்கிறது’ என்று சிடுசிடு என்று கூறினார். ஆதிமந்தி : ஐயையோ ஒடு, ஒடு இறக்கும் நேரம்: 'இதோ வந்துவிட்டாள் ஆதிமந்தி' என்று கூறிவிட்டு GllП", தோழி : இறக்கும் நேரம் என்று அவரிடம் சொன்னதற்கு, "இங்கு மட்டும் நான் வாழும் நேரமா? நானும் இறக்கும் நேரந்தான்' என்று எரிந்துவீழ்ந்தார். tary 2–