பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1. பாவேந்தர் பாரதிதாசனின் குடும்ப விளக்கு புதுவைக்குயில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் அரிய உயரிய படைப்பு குடும்ப விளக்கு" எனலாம். 'கல்வே" கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய பாரதிதாசனுக்குப் பாரதியாரின் தொடர்பு பாண்டிச்சேரியிலே ஏற்பட்டது. ஒரு திருமணத்தில் பாரதியும் பாரதிதாசனும்-அப்போது பெயர் கனக சுப்புரத்தனம்-சந்தித்தனர். பாரதியார் கனக சுப்பு ரத்தனத்தைப் பார்த்து ஒரு பாடல் எழுதச் சொன்னார். "எங்கெங்குக் காண்னும் சக்தியடா!' என்ற பாடல் பிறந்தது. அப்பாடலைப் பாரதியார், 'பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்னம் இயற்றியது" என்று சொல்லிச் சுதேசமித்திரன்’ பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். அப்பாட்டும் பிரசுரம் ஆனது. பாரதியா ரிடம் தாம் கொண்டிருந்த நட்புறவு, நேயம், பெருமதிப்பு. -இவற்றின் காரணமாகக் கனகசுப்புரத்தனம் பாரதி தாசன் எனப் பெயர் மாற்றம் செய்துகொண்டார். மளிகைக்கடை அ கெ ஆ அ.ைபி முதலியாரின் மைந்தர் சுப்புரத்தனம் புரட்சிக் கவிஞராய், பாவேந்தராய்த் துலங்கினார். திராவிட இயக்கத்தின் தனிப்பெருங் கவிஞராகப் பின்னாளில் திகழ்ந்தார். இவர் கவிதை, உரைநடை, நாடகம், திரைப்படங்களுக்கு உரை யாடல்கள் என்று பல துறைகளில் தம் திறமையைக் காட்டினார். இவர் இயற்றிய கவிதை நூற்களில் சிறப்பிடம் பெற்றுத் துலக்குவன பாரதிதாசன் கவிதைகள் I, II, III தொகுதிகள், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், zsif. turf.--13 -