பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W.rum. 195 இத்தகைய குடும்பத்தில் எடுத்ததற்கெல்லாம். வேலைக்காரன், வேலைக்காரி வேண்டாம். அனைத் துக்கும் பிறர் கையை எதிர்பார்ப்பது நிலையற்ற செய்கை, எப்போதும் எதிர்பார்க்கக் கூடியதன்று: ஏனென்றால் எல்லாரும் வேலைக்காரர் அல்லது எல்லாரும் உடையவர் என்ற நிலையை உண்டாக்கத் தான் அறிவுலகம் விரைந்து வேலை செய்கிறது. இவ் வையகத்தின் நோக்கமும் அதுதான்! குடும்ப விளக்கில் வேலையாட்களுக்கு இடம் ஏற்படுவதில்லை. தமிழ்நாட்டின் பண்டைய அறிஞர்கள் கண்ட குடும்பங்கள் நமக்குச் சீவகன் முதலிய பெருநூற்களிற் காட்சியளிக்கின்றன. இன்றைய நிலையில், எளிய நடையில் அமைந்த "குடும்ப விளக்கு" ஒரு நடுத்தரக் குடும்பம் இது என்று திட்டமாகச் சொல்லா விட்டாலும் கோடு காட்டியதாகவாவது இருக்கும்." கவிஞர் கருத்து என்ற தலைப்பிற் காணப்படும் மேற்கானும் கருத்துகள் சிந்தனைக்கு விருந்து நல்குவன வாகும். குடும்ப விளக்கு ஐந்து பகுதிகள் கொண்டது. முதற்பகுதிக்குத் தலைப்பு இல்லை. ஆயினும் கவிஞர் இரண்டாம் பகுதியின் தொடக்கத்தில், "குடும்ப விளக்கு முதல் பகுதியின்கண் நல்லதோர் குடும்பத்தின் ஒரு நாள் நிகழ்ச்சி குறிக்கப் பெற்றிருந்தது" என்று குறிப்பிடுகின் றார். எனவே முதற்பகுதியினைக் "குடும்பத்தின் ஒரு நாள் நிகழ்ச்சி எனலாம். இரண்டாம் பகுதி விருந்தோம்பல்" என்பதாகும். மூன்றாம் பகுதி திருமணம் எனப் பெயரிடப்