பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靖96 பாரதியும் பாரதிதாசனும் பட்டுள்ளது. மக்கட்பேறு நான்காம் பகுதியின் தலைப் பாகவும், முதியோர் காதல் ஐந்தாம் பகுதியின் தலைப் பாகவும் அமைந்திருக்கக் காணலாம். குடும் விளக்கின் உயிர்நிலைப் பாத்திரம் தங்கம்' எனலாம். வைகறையில் கண்விழித்துக் காலைக் கடமை களைக் கருத்தாய் முடித்துக் குடும்பப் பாங்கில் துலங்கும் தங்கம் என்றென்றும் நம் நெஞ்சை விட்டு ஆகலாத பாத்திரப் படைப்பு எனலாம். காலையில் கண்மலரும் மங்கை தங்கம், சிறியதாக எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் திரியைத் துரண்டி விட்டுக் கொல்லைப்பக்கம் சென்று, கிணற்றிலிருந்து குளிர் புதுப்புனலைக் கொண்டு முகத்தைத் துலக்கி, வாய் கொப் பளித்து, பின்னும் நீரைச் சேந்தி எடுத்துக கொண்டு முன் வாயிற்புறம் சென்று வாசல் கூட்டி, மெழுகி, அரிசிமாக் கோலம் தீட்டி நின்றாள். அடுத்து, இல்லத்தினுள் சென்று உறைக்குள் உறங்கும் யாழினை எடுத்து வாழிய, வையம் வாழிய' என்று பாவலர் தமிழிற் பழச்சுவை சேர்த்தாள். பிள்ளைகளும் கணவன் மணவழகனும் எழுந்துவந்து மங்கையின் எதிரில் அமர்ந்து தமிழிசை பருகினர். அதன் பின்னர்த் தங்கம் பசும்பால் கறந்தனள்; வீட்டை ஒளி பெறச் செய்தனள், செம்பு தவலை விளக்கிச் செழும் பொன்னாகத் துலங்கும்படிசி செய்தாள்: தண்ணிரி இறைத்துவைத்துத் தொட்டியை நிறைத்தாள்; அடுப்பை மூட்டி அப்பம் கட்டு அடுக்கி வைத்தாள்; குடிக்க இனிய கொத்துமல்லி நீர் இறக்கி, அதிற் பாலும் சருக்கரையும் அளவொடு கலந்து, முத்தான வாயால், முழுநிலா முகத் தாள் அத்தான் என்றழைக்க, அழகியோன் வந்தான்.