பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பாரதியும் பாரதிதாசனும் துக் கீழே விழுந்து விட்டானோ, என எண்ணுவாள். அடுத்த கணம், சின்னவனைக் காப்பாற்ற மூத்தவன் உண்டு என அச்சத்தை அகலத் தள்ளினாள். ஒட்டடைக் கோல் கையிற் கொண்டு வீட்டின் ஒட்டடையை மாற்றி ஒழுங்குபடுத்தினாள். தையற் பொறியில் குழந்தைகளுக்கான சட்டைகள் தைத்தாள். மரச் சாமான்களில் ஒடிந்தவைகளைப் பழுது பார்த்தாள். இடிந்துள்ள சுவருக்குச்சுண்ணாம்பு வைத்து அடைத்தாள். நாத்தியார் வீடு சென்றிருந்த தங்கத்தின் மாமனும் மாமியும் வீடு திரும்பி வந்தனர். அவர்களை முக மலர்ச்சி யுடன் முகமன் கூறி வரவேற்றாள். நாத்தியார், கூறும் நலங்களை உசாவினாள். அவர்கள் கொண்டுவந்திருந்த பண்டங்களைப் பக்குவமாக இறக்கி வைத்தாள். அவர்களை வெந்நீரில் குளிக்க வைத்து, நல்ல உணவு நல்கி, துப்பட்டி விரித்த மெத்தையில் துயிலவைத்துப் பின் காய்கறிகள் வாங்கி வருவதற்காகச் சென்றாள். 'கடையிலே செலவு செய்த கணக்கினை எழுதி வைத்தாள். இடையில் விக்குள் வந்த மாமனுக்குத் தண்ணீர் தந்து அவ்விக்குகளை மாற்றினாள். பிள்ளைகள் கணவன், மாமன், மாமியர் என்று அவரவர்க்குப் பிடித்தமான உணவைப் பக்குவமாகச் சமைத்தாள். 'கறிகள் தோறும் உண்பவர் தம்மைக் கண்டாள்". சமையல் முடித்துத் துரங்கிய மாமனின் வீங்கிய காலைப் பார்த்து ஏங்கிய தங்கம், மருந்து பூசிச் சரி செய்து படுக்க வைத்தாள். அவர் உடம்பு காய்ச்சல் அடிப்பதைக் கண்டு நன்மருந்து உள்ளுக்குச் சாப்பிடத் தந்தாள். அவருக்கு உணவாகக் கஞ்சி காய்ச்சித் தந்தாள். மாமியின் தலைநோக்காட்டிற்குப் பற்றுப் போட்டு