பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A, urr. 19 Ꮽ ஒரு நொடி நேரத்தில் அந்தத் தலைவலியை ஒடச் செய்தாள். i பள்ளி விட்டு வந்த தன் சின்னஞ் சிறாரைத் துள்ளிய மகிழ்ச்சியுடன் வரவேற்றாள். பள்ளியில் நடந்த பாடத் தைக் கேட்டு, அவர்தம் உடுப்பை மாற்றி, அவர்தம் மாத்தா பாட்டி வந்து உள் வீட்டில் படுத்திருப்பதை உணர்த்தினாள். இந்நேரத்தில் கடையிலிருந்து கணவன் மணவழகன் வீடு வந்தான். அவனிடம் 'ஒன்றுண்டு சேதி” என்றாள். அவனோ உரை என்றான். தாய் தந்தையர் வந்தனர் என்றாள். பின் அவர் நொந்துள்ள நோக்காட்டு நிலைமை சொன்னாள். பெற்றோரிடம் உங்கள் தள்ளாத பருவந்தன்னில் நைந்திடும்வண்ணம் நீங்கள் நடந்திட லாமா?" என்று கேட்டு, நின்றான். தந்தையோ "உன்னைப் பெற்றதால் ஒரு கவலையும் இல்லை; உன் மனைவியோ அறிவுக்கோர் திருவிளக்கு" எனக் கூறி, உணவுண்ண அனுப்பி வைத்தார். எல்லோரும் மகிழ்ச்சியுடன் உண வுண்டனர். தமிழிசை பாடிப் பின் தையல் அனைவரை யும் மகிழ்வித்தாள். கணவன் சோம்பல் காரணமாகப் பிற்பகல் கடைக்குச் சென்று கணக்கரைச் சாப்பாட்டிற்கு அனுப்பி வைக்கத் தயக்கங் காட்ட, தங்கமே கடைக்குச் சென்று வியாபாரத்தைக் கவனித்தாள். சற்று ஒய்வு பெற்றுக் கணவன் கடைக்கு வர அவனிடம் ஒப்படைத்து விட்டு வீடு வந்தாள். மாமனார் மாமியா’க்கு வேண்டிய குறைந்த உணவு தந்து, அவரைத் தடுக்கினிலிருந்த சாய்வு நாற்காலியிற் சேர்த்தாள். வெய்யிலில் காய வைத்த வடகம், வற்றலைப் பெரிய சாலில் இட்டாள். தோட்டத் தில் கட்டியுள்ள மாடு, கன்றுகளுக்குத் தீனி போட்டாள். விளக்குகள் துடைத்து வைத்தாள். மாலையில் மக்கள் பள்ளியினின்றும் வந்தனர். மகி ழ்ச்சியடைந்தாள்.