பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 aாரதியும் பாரதிதாசனும் இத்தகைய உரையாடலின் கருத்துநயம் நினையும் தோறும் மகிழ்வூட்டுவதாகும். மேலும் ஆதிமந்தி சோழப் பேரரசன் கரிகாற் பெரு வளத்தானின் அருமைத் திருமகளாய் இருப்பினும், தன் காதற்கொழுநனுக்குத் தானே சமையல் செய்யவும், எண்ணெய் தேய்க்கவும் விரும்புவதாகக் கூறும் கவிஞர். காதல் வாழ்வின் நுட்பத்தினையும், பெற்றியினையும் பாங்குறப் புலப்படுத்துகின்றார். "அத்தானுக்கு என்ன பிடிக்கும், மாமிக்கு எந்தக் கறி பிடிக்கும் என்பது எனக்கல்லவா தெரியும்? உணவு ஆக்கும் பொறுப்பைப் பணிப்பெண்களிடம் ஒப்படைக்கலாமா?" "உங்கள் திருமேனி தீண்டி எண்ணெய் இட்டு எழில் மார்பில் இரு கண்ணையிட்டுத் துய்மை செய்யும் இன்பப் பணியை நான் பணிப்பெண்ணுக்கோ கொடுக்க உடன் படுவேன்?" பாரதி, பாரதிதாசன் ஆகியோர் இருவரும், பெண்ணுரிமை பேசிய பெருங்கவிஞர்களாவர். பாரதியின் புதுமைப் பெண்ணைக் காண்போம். கிமிர்ந்த கன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மைமாதர் திறம்புவதில்லையாம். -புதுமைப் பெண் : ? பாரதிதாசன் பெண்ணுரிமை குறித்துச் சற்றுக் காரசாரமாகவே கவிதை வடிக்கிறார்.