பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 பாரதியும் பாரதிதாசனும் புதுவையையடுத்த வில்லியனுாரிலிருந்து செல்வர் திரு மாவரசனாரும், அவர்தம் துணைவியார் மலர்க்குழலி அம்மையாரும் அவர்தம் மகன் நாவரசும், மகள் நகை முத்துவும் தங்கம் வீட்டிற்கு விருந்தினசாக வருகின்றனர். அவர்களை அகமும் முகமும் மலர வரவேற்கின்றனர் தங்கத்தின் வீட்டார். இப்பகுதியில் எவ்வாறு விருந்தோம் வேண்டும் என்பது மிகச் சிறப்பாக ளிளக்கப்பட்டுள்ளது. மாணவர் இப்பகுதியினைக் கருத்துண்றிப் படிக்கவேண்டும். ஆணும் பெண்ணும் எவ்வாறு கருத்தொருமித்து காதலில் திளைத்துக் கடிமணங் கொள்ளவேண்டும் என். பதனையும் மனம் மாறுபட்டால் மணமுறிவு வேண்டும் என்றும், பிள்ளை மிகுந்தால் கருத்தடை வேண்டும் என்றும் புரட்சிக்கவிஞர் சிறப்பாகப் புலப்படுத்தியுள்ளார். உள்ளம் கவர்ந்தாளின் உள்ளத்தைத் தான் கவர்ந்து வெள்ளத்தில் வெள்ளம் கலந்ததென-விள்ளும் நிலை கண்டு மணம்புரிதல் வேண்டும். கடிமணமும் பண்டை மனமென்றும் பார்ப்பானைக்-கொண்ட அடிமை மணமென்றும் சொல்லும் அனைத்தும் கடிந்து பதிவுமணம் காணல்-கடனாகும் அன்பால் அவளும் அவனும் ஒருமித்தால் துன்பமவ ளுக்கென்னில் துன்புறுவான்-துன்பம் அவனுக்கெனில் அவளும் அவ்வாறே இந்தச் சுவைமிக்க வாழ்வைத்தான் தூயோர்-நவையற்ற காதல் வாழ்வென்று கழறினார் அக்காதல் சாதல் வரைக்கும் தழைத்தோங்கும்-காதல் உடையார்தம் வாழ்வில் உளம் வேறுபட்டால் மடவார் பிறனை மணக்க-விடவேண்டும் ஆடவனும் வேறேர் அணங்கை மணக்கலாம்