பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Һ. ит. 263 கூடும்மண மக்கள் கொளத்தக்க-கீடுகலம் என்னவெனில் இல்லறத்தைச் செய்தின்பம் எய்துவதாம்? கன்மக்கட் பேறுபற்றி நானுரைப்ப-தொன்றுண்டாம் ஈண்டு குழந்தைகள் தாம் எண்மிகுத்துப் போகாமல் வேண்டும் அளவே விளைத்து, மேல்-வேண்டக்கால் சேர்கை ஒழித்திடுக கருத்தடையேனும் செய்க. பெண் கல்வி பற்றிப் பாரதிதாசன் முழங்கும் முழக்கம் உளங்கொளத் தக்கது. இப் பாடல்கள் மனப்பாடம் செய்தற்குரியனவாகும். பெண்கட்குக் கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும் மக்களைப் பேணுதற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும் உலகினைப் பேணுதற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும கல்வியைப் பேணுதற்கே" கல்வியில் லாத பெண்கள் களர்கிலம்: அந் நிலத்தில் புல்விளைந் திடலாம்; நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை! கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி, அங்கே கல்லறி வுடைய மக்கள் விளைவது கவில வோகான். பாரதிதாசனாரின் புரட்சி இப்பகுதியில் மேலும் ஒரு படி உயர்கிறது. சமையல் செய்வது பெண்ணுக்கே உரிய வேலை என்று இதுகாறும் இருந்து வருவதனையே மாற்றுவோம் என்கிறார்,