பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பாரதியும் பாரதிதாசனும் சமைப்பதும் வீட்டு வேலை சலிப்பின்றிச் செயலும், பெண்கள் தமக்கே ஆம் என்று கூறல் சரியில்லை! ஆடவர்கள் நமக்கும்அப் பணிகள் ஏற்கும் என்றெண்ணும் கன்னாள் காண்போம் சமைப்பது தாழ்வா? இன்பம் சமைக்கின்றார் சமையல் செய்வார். தங்கத்தின் தலைமகன் வேடப்பன் மாவரசர் மகள் நகைமுத்துவின் மேல் காதல் கொள்கின்றான். "இது வரைக்கும் இறந்திருக்கும் மங்கையரிலேனும் மற்றும் இனிப் பிறக்கும் மங்கையிரிலேனும் அந்த நிறைந்திருக்கும் அழகு நகைமுத்தாள் போன்றாள் இல்லையென" நினைக்கின்றான். - தொகை முத்துக் குவித்தாலும் ஒன்றில் நெஞ்சைத் தோய்த்தாரை மாற்றுவதோ அருமை என்றபடி விேடப்பன் நகைமுத்து காதல், ஒரு நாளிலேயே நூறுமுறை ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு வளர்ந்து நிற்கிறது. மூன்றாம் பகுதி திருமணம்' என்பதாகும். இப் பகுதியில் வில்லியனுர் மாவரக-மலர்க்குழல் மகள் நகைமுத்துவிற்கும் புதுவை மணவழகன்-தங்கம் மகன் வேடப்பனுக்கும் திருமணம் நடைபெறுகின்றது. மணவழகன் வேடப்பனை வில்லியனுாருக்குத் தன் கடை பாக்கி வசூல் தொடர்பாக அனுப்பி வைக்கிறான். நகைமுத்து மேல் காதல் வேகங்கொண்ட ைேடப்பன் அந்தச் சாக்கில் நகைமுத்துவைப் பார்க்கச் செல்கிறான். இவர்கள் காதல் இருதரப்புப் பெற்றோர்களுக்கும் தெரிய வருகிறது. இருவரும் இணைய ஒப்புதல் தெரிவிக்