பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 * பாரதியும் பாரதிதாசனும் அறம் செய்த கையும் ஒயும்! மக்களை அன்பால் தூக்கிப் புறம்போன காலும் ஓயும்: செந்தமிழ்ப் புலவர் சொல்லின் திறம்கேட்ட காதும் ஓயும்: செயல்கண்ட கண்ணும் ஓயும்! மறவனைச் சுமக்கும் என்றன் மனமட்டும் ஓய்தலில்லை! என்று தங்கம் நினைக்கிறாள். மணிமொழியார் என்னும் சான்றோர் ஒரு நாள் மணவழகர் வீடு வந்து, அவர் நூற்று ஐந்து ஆண்டுவரை வாழக் காரணம் என்ன என்று கேட்டார். "தம் தந்தை தாய் நல்லொழுக்கமுடையவர்கள்; என்னைக் கற்றறி வாளனாக ஆக்கி வைத்தனர். நானும் நல்லொழுக்கத் தைத் தீண்டியதில்லை. என் மனைவி எனக்கினியவள்: என் கண் போன்றவள்; குற்றமில்லாதவள்: நான் வாழத் தன்னுயிரையும் நல்கும் நாட்டமுடையவள்; அவளால் என் ஒழுக்கத்தைக் காத்தேன்; குடும்பம் குற்றமற்றதாய்ச் சென்றது; சற்றும் கவலை கொள்ளாமல் நான் வாழ்ந்தேன். நல்ல ம ைன வி ைய உடையவர்கள் கடலுலகப் பெரும் புகழும் வாழ்நாளும் உடையவராவார்" என்று மணவழகர் மறுமொழி பகன்றார். மணவழகர் வாக்காலே உலக அமைதிக்கு, ஒர் எளிதான வழியினைப் பின்வருமாறு உரைக்கின்றார்; இவ்வுலகில் அமைதியினை நிலைகாட்ட வேண்டின் இயேசுவழி ஒன்றுண்டு; பெண்களை ஆடவர்கள் எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும் தாய்மையினை இழித்துரைக்கும் நூலும் ஒரு நூலா? செவ்வையுற மகளிர்க்குக் கல்விகலம் தேடல்