பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.பாe 209 செயற்பால யாவினுமே முதன்மை எனக்கொண்டே அவ்வகையே செயல்வேண்டும் அறிவுமனையாளால் அமைதியுல குண்டாகும் என்ன இதில் ஐயம்? மகளிரெலாம் கல்வியறி வொழுக்கமுள ராயின் மருத்துவமே வேண்டாவாம்; பிணிமூப்பு வாரா மகளிரெலாம் அரசியலைக் கைப்பற்றி ஆண்டால் மாநிலத்தில் போரில்லை; சாக்காடும் இல்லை துகளில்லா ஒருசிறிய உலகுண்டு கேட்பீர் தொல்லையில்லா அவ்வுலகம் யான் வாழும் இல்லம் பகையில்லை; அங்கின்மை இல்லை பிணி இல்லை பழி இல்லை, என்துணைவி அரசாண்ட தாலே! இன்புறும் இரண்டு மனப்பறவைகளாக அவர்கள் இல்லறம் நிகழ்த்துகின்றனர். "தெவிட்டாது காதல் நுகர் தேன்சிட்டுககளாக, பெருந்தென்னங்கீற்றினிலே இருந் தாடும் கிளிகளாக, வையத்துள் வாழ்வாங்கு வாழுகிறார் கள். இவ்வாறு மனம் ஒன்றுபட்டு வாழும் அன்பு நெஞ்சங் களான தங்கம் மணவழகன் வற்றாத வளமான காதல் வாழ்வின் பெற்றியினைக் குடும்ப விளக்கு இனிதுறக் கிளத்தி நிற்கிறது. இனிப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரின் உவமை நலச் சிறப்பினையும், கவிதையழகினையும், கருத்துச் செறிவினையும் ஒரளவு காண்போம். உவமை நலம் 1. கேள்வியால் அகலும் மடமைபோல் கள்ளிரவு மெதுவாய் கடந்து கொண்டிருந்தது 2. தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது t_ffr. Ljrr.-l4