பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 பாரதியும் பாரதிதாசன் செய்து ஒரு நயம் ஏற்படுத்துவதிலே பாரதிதாசன் வல்லவர் என்பதனைக் கீழ்க்காணும் பாடல் புலப்படுத்தும். செல்லப்பள உணவு கொள்ளச் சிறுவர்கள் தமையும் உண்ணச் சொல்லப்பா எனவே; அன்பு சொல்லிவிடச் சொல்லி டுக்தன் நல்லப்பா மகிழும் வண்ணம் நல்லதப் பாஎன் றோதி. மெல்லப்பா வைபு ரிங்த விருந்தினை அருந்த லுற்றான். இயற்கை வருணனைத் திறத்திலும் பாரதிதாசனும் சிறந்து மிளிர்கின்றார் என்பதனைப் பின்வரும் பகுதி யாங்காய் உணர்த்தும். மேற்றிசைக் கதிர்ப் பழத்தை விருந்துண்டு, நீல ஆடை மாற்றுடை யாய்உ டுத்து மரகத அணிகள் பூண்டு கோற்கிளை ஒடுங்கும் புட்கள் கோட்டிடும் இறகின் சந்தக் காற்சிலம் பசையக் காதற் கரும்பான இரவு தன்னை திருவிளக் கேந்தி வந்து தெருவினில் வரவேற் கின்றாள். அடுத்து, பாரதிதாசன் கவிதைகள் கருத்துச் செறிவு கொண்டனவாகும். தங்கம் தன் கணவன் மணவழகனைப் பின்வருமாறு குறிப்பிடும் கூற்றில் கருத்துச் செறிவு நிறைந்திலங்கக் காணலாம்.