பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0N.• mrr. 2 ፫ $ தொப்பென்ற ஓசை கேட்டால் துயருறும் என்றும், சாற்றிற உப்பொன்று குறைந்தால் உண்ணல் ஒழியுமே என்றும் ஒன்லை ஒப்பெனில் ஒப்பா விட்டால் உடைபடும் உள்ளம் என்றும் தப்பொன்றும் இன்றி என்றன் தமிழனை அன்பாற் காத்தேன். மேலும் பாரதிதாசனார் குடும்பவிளக்கின் பலவிடங் களில் நகைச்சுவை கொப்பளிக்கும்வண்ணம் நயம்படக் கவிதை கிளத்தியுள்ள பாங்கும் ஊன்றி உளங்கொளத் தக்கதாகும். எடுத்துக்காட்டாகக் கீழ்க்கானும் அடிகளைக் குறிப்பிடலாம். இவையெலாம் வண்டிக் குள்ளே இருந்தன என்றால் அந்த அவைக்களம் தனிலே விேர் எங்குத்தான் அமர்ந்திருந்தீர்? சுவைப்புளி அடைத்து வைத்த தோண்டியின் உட்பு றத்தில் கவர்ந்துண்ணும் பூச்சி கட்கும் கால்வைக்க இடமி ராதே! எள்றனள், மாமி சொல்வாள்; இவைகளின் உச்சி மீதில் குன்றுமேல் குரங்கு போல என்தனைக் குந்த வைத்தார் என்தலை நிமிர வேண்டி மூடிமேல் பொத்த லிட்டார்! உன்மாமன் கடந்துவந்தார் ஊரெல்லாம் சிரித்த தென்றார்.