பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多卫4 பாரதியும் பாரதிதாசனும் மேலும் பலவிடங்களில் புரட்சிக்கவிஞர் திருக்குறளின் கருத்துகளைக் கையாண்டுள்ளார். அப்பகுதிகளைச் சற்று ஊன்றிப் பயிலுதல் வேண்டும். அடுத்து, ஒளவையார், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் முதலான சான்றோர் பெருமக்களின் மணிமொழிகளையும் பொன்னே போற் போற்றித் தம் குடும்ப விளக்கில் ஒளி .ெ ப ம ச் செய்துள்ளார். சுருங்கச் சொன்னால் குடும்: விளக்கு தமிழர் சமுதாய இருள் போக்கவந்த ஒளிவிளக்கு எனலாம். எனவேதான் பாரதிதாசனார், "குடும்ப விளக்கைப் பெறும் தோழர்கள் தாமேயன்றி மறந்து போகாமல் தம் துணைவியார்க்கும் படிக்கக் கொடுக்க, துணைவியார் எழுத்தறிவில்லாராயின் படித்துக் காட்டுக. துணைவர்க்கு எழுத்தறிவு இழுப்பாய் இருந்தால் துணைவியார் சொல்லிக் காட்ட மறவாதிருக்க வேண்டுகிறேன். ஏனெனில். "தலைவனிடம் தலைவி நடந்துகொள்ள வேண்டிய சிலவற்றைத் தலைவன் அன்பு காரணமாகச் சொல்லப் பின்வாங்குவது உண்டு. அவ்வாறே த ைல வி யும் பின்வாங்குவதுண்டு. அப்படிச் சொல்ல வேண்டிய சிற்சில வற்றைக் குடும்ப விளக்குச் சொல்லும். "மிகச் சிறியது. குறள் ஒவியம் குடும். விளக்கு" என்று குறிப்பிட்டுள்ளார். - குறிப்பாகக் குடும்ப விளக்காம் தங்கத்தின் பாத்திரப் கடைப்பினைத் தவறாது உணர்ந்து கொள்வார்களாக.