பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. குடும்ப விளக்கு தரும் ஒளி. தங்கம்’ பாவேந்தர் என்றும், புரட்சிக்கவிஞர் என்றும் nங்கமிழ்நாட்டு மக்களால் நலமுறைப் பாராட்டப்படும் கவிஞர் கனகசுப்புரத்தினம், பாரதியாருடன் தாம் கொண்ட தொடர்பும் ஈடுபாடுங் காரணமாகப் பாரதி அாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். தமிழ் நrட்டின்மீதும், தமிழினத்தின்மீதும். தமிழ்மொழியின் மீதும் தண்டாத பற்று நிரம்பியவர்; பெண்ணினத்திற்குப் பெருமை சேர்க்கும் முறையில் எழுதியும் பேசியும் வந்தவர்; பகுத்தறிவு வேட்கையும் சீர்திருத்தப் போக்குங் கொண்டவர்; புலமைச் சிறப்பும் கொள்கைக்குப்போராடும் திறனும் சான்றவர்; இயற்கையை இனிதுறக் கிளத்திக் காட்டும் இனிய பெற்றி நிறைந்தவர். தமிழே தம் மூச்சாய்ப் பேச்சாய், தமிழர் நலமே தம் கண்ணாய்க் கருத்தாய், தமிழ்நாட்டு முன்னேற்றமே தம் வாழ்வாய் வளமாய் வாழ்ந்த பெருங்கவிஞர் பாரதிதாசன் அவாகள் வண்டமிழ் மொழியில் நந்தமிழ்நாட்டுக்கு வழங்கிய கவிதை நூல்கள் பல; அவற்றுள் ஒன்றான குடும்ப விளக்குப் பற்றிக் கருதுவதே இச் சிறு கட்டுரையின் நோக்கமாகும். "குடும்ப முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்" என்றும் "முன்னேற்றம் உடைய குடும்பம் எப்படி இருக்கும் என்பது சற்றிய என் எண்ணந்தான் இந்தச் சிறிய நூல்" என்றும், "நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்" என்றும் கவிஞர் தம் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.