பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பாரதியும் பாரதிதாசனும் பாவேந்தர் இயற்றியுள்ள நூல்களில் குடும்ப விளக்கு தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். ஒரு குடும்பம் மகிழ்ச்சியும் அமைதியும் பொலிந்து தோன்றும் திருவிடமாக விளங்கு தற்கு இந்நூல் உறுதுணை செய்யும் என்பதில் ஐயமில்லை. காரணம் இந்நூலில் கூறப்பட்டிருக்கும், விளக்கப் பட்டிருக்கும் கருத்துகள் அனைத்தும் நல்லதொரு குடும்பம் அமையத் துணை நிற்கின்றன எனலாம். "உள்ளதை உள்ளவாறு கூறுவதோடு, கவிஞன் உள்ளதை உணர்ந்தவாறும் கூறவேண்டும்" என்று இலக்கியத் திறனாய்வாளர் செப்புவர். இம்முறையிற் பார்ப்பின், பாவேந்தர் பாரதிதாசனார் அவர்களின் குறிக்கோட் குடும்பத்தின்ை இந்நூல் அணியும் ஒளியும் பெறக் காட்டி - நிற்கிறது எனக் கூறலாம். - f 'குடும்ப விளக்கு" எனும் நூலினைப் படிக்குங்காலை யில் நம் நெஞ்சைவிட்டு நீங்காத பாத்திரமாய் நின்றொளிர்வது தங்கம்’ எனும் பாத்திரமேயாகும். நூலின் தொடக்கமே, தங்கம் என்னும் மங்கை நல்லாள் தன் குடும்பத்தின் காலைக் கடமைகளில் கருத்தொடு கலந்து நிற்றலைக் காட்டுவதாய் அமைந்துள்ளது. இக் காலைக் கடமைகளைக் கவினுறக் காட்டும் ஆசிரியர் திறம் வருமாறு : "சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு சார்ந்ததாழ் திறந்து தகடுபோற் குறடு கூட்டி மெருகு தீட்டிக் கழுவி அரிசிமாக் கோலம் அமைத்தனள் அவளுக்குப் பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி" - ஒரு நாள் நிகழ்ச்சி-கோலமிட்டாள் 11-15