பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கண்ட இயற்கை புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நூற்றாண்டு விழா ஏப்ரல் திங்கள் தொடங்கி 1991 ஏப்ரல் திங்கள் வரையில் கொண்டாடப்படவிருக்கின்றது. முப்பது நூற்றாண்டுகளாக முறையாக வளர்ந்துவரும் தமிழ் இலக்கியம் மூன்று சிறப்புக் கூறுகளைச் சிறப்பாகப் புலப்படுத்துகின்றது. 1) இறைவன், 2) இயற்கை, 3) பெண்மை. என்று அம்முக்கூறுகளை நாம் சொல்லலாம். இறைவன், இயற்கை, பெண்மை என்ற அம் முக்கூறுகள் இறைவ னுடைய படைப்பாக இலங்குகின்றது. A thing of beauty is a joy for ever என்று ஆங்கிலக் கவிஞர் கிட்ஸ் குறிப்பிட்டது போல நம்முடைய கவிஞர் ஒருவரும் அவர்களும் தோய்ந்து நிற்கின்றார். அவருடைய நூல் அதற்குக் சான்று பகர்கின்றன. எனக்குக் குயிலின் பாடலும் மயிலின் ஆடலும் வண்டின் աT(քւն அருவியின் முழவும் இன்னும் பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்" என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் குறிப்பிட் டுள்ளதுபோல அழகின் சிரிப்பு’ எனும் அவருடைய கவிதை நூலில் பாரதிதாசன்.