பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雳24 பாரதியும் பாரதிதாசனும் "இயற்கை அனைத்தும் அழகே.அந்த அழகுக்குச் செந்தாமரை என்றும், நிலவென்றும்; கதிரென்றும் சிரித்தது. காணும் பொருள் எல்லாம் அழகைக் காணவும் கண்டவாறு தாமே சொல்லோவியம் தீட்டவும் திறம்பெறுதல் வேண்டும். தமிழர்கள் பிற மொழி. தமிழ்மொழி நூல்களில் வார்த்தபடியே எழுதும் நிலை தீரவேண்டும். அதற்கு இச்சிறுநூல் இயற்றியதன் வாயிலாக நான் இதை அறிஞர்க்கு நினைவுறுத்துகின்றேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

  • Wordsworth-srsárg)/p ஆங்கிலக் கவிஞனுக்கு இயற்கையே எழுதுகோலாக இருந்து அவன் பாராட்டி srap$oungsråå (Nature itself wrote for him)–(5 soloilo Gauff அவ்வகையில் புரட்சிக் கவிஞர் பாவேந்தருக்கு,

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்; அந்தச் சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில் தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்! மலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவன் இருந்தாள் ஆலஞ் சாலையிலே கிளைதொறும் கிளியின் கூட்டங் தனில் அந்த அழகென்பாள் கவிதை தந்தாள் என்று அழகின் சிரிப்பு எனும் நூலில் அழகே கவிதை பிறக்கக் காரணமாக அமைவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறு குழந்தை விழியினிலும் விளக்கின் சுடரினிலும் பூக்கட்டும் மங்கையின் விரல் வளைவிலும், உழவின் களிப்பைச் செல்லும் நடையிலும், பச்சைப் பசும் பட்டுடை உடுத்துதல் போன்று காட்சி தரும் நஞ்சை