பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பாரதியும் பாரதிதாசனும் இடையிலே கிடக்கும் வெள்ளம் எழில்வீண; அவ்வீணைமேல் அடிக்கின்ற காற்றோ வீணை நரம்பினை அசைத்தின்பத்தை வடிக்கின்ற புலவன். நிலவைப் பார்க்கும் கவிஞருக்குப் புதுமை ஒன்றும் தோன்றுகிறது. முழுமைகிலா! அழகுகிலா! முளைத்தது விண்மேலே-அது பழமையிலே புது நினைவு பாய்ந்தெழுந்தாற்போலே! அழுதமுகம் சிரித்தது போல் அல்லி விரிந்தாற்போல்-மேல் சுழற்றி எறிந்த வெள்ளித்தட்டுத் தொத்திக் கிடந்தாற்போல் என்றும் வருணிக்கின்றார். விடியல் காட்சியைப் பாரதிதாசன் அவர்கள் ஒரு புதுமையான முறையில் வருணித்துள்ளார். இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை இரவுபோர்த்த இருள் நீங்கவில்லை ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல் கள்ளிரவு மெதுவாய் கடந்து கொண்டி ருந்தது! தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பென இருள் தன் கட்டுக் குலைந்தது என்று காலைக் காட்சியை வருணித்து இருப்பதும், இதைப் போன்ற சஞ்சீவி பருவதத்தின் சாரலைக் குறிப்பிடுகின்ற பொழுது,