பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பாரதியும் பாரதிதாசனும் கண்மீதில் பகலி லெல்லாம் கண்டுகண் டக்திக் குப்பின் விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி! என்று குறிப்பிட்டுள்ளார். ஆலமரத்தை வருணிக்கும் இந்தக் கவிஞர் ஒரு நகைச் கவைக் காட்சியை நம் கண்முன் கொண்டு வருகின்றார். ஆலமரத்தின் கிளையில் பாம்பு தொங்க அதனை விழுது என்று எண்ணிக் குரங்கு தொட்டுவிட்டுத் தவறுதலாக விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கென்று குதித்த தைப்போல் அக் குரங்கு கிளைதொறும் தாவித்தாவிக் குதித்தது. மரத்தின் மேலே சென்று கீழே உள்ள விழுதினை எல்லாம் ஒளியுடைய பாம்புகளென்று கருதி, உச்சிக்கிளைக்குச் சென்று தன் வாலையே பாம்பு என இலக்குகின்ற காட்சியைக் கவிஞர். கிளையினிற் பாம்பு தொங்க விழுதென்று, குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்த தைப்போல் கிளைதொறும் குதித்துத் தாவிக் கீழுள்ள விழுதை யெல்லாம் ஒளிப் பாம்பாய் எண்ணிஎண்ணி உச்சிபோய்த் தன்வால் பார்க்கும். அந்த காட்சியோடு கவிஞர் நின்றுவிடாமல் தமிழினத்தின் தலைமைப் பண்புகளில் ஒன்றாகக் கருதப்படும் நன்றிஎன்ற நல்ல உணர்வினை ஆலினைக் காற்று மோதும் அசைவேனா எனச் சிரித்துக்