பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கண்ட பெண்மை புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பாரதியாரை அடுத்துப் பெண்மையைப் பற்றிப் புகழ் கின்றார். முதலாவதாகப் பெண்களுக்குக் கல்வி தேவை என்று குறிப்பிடுகின்றார். கல்வி இல்லாத பெண்கள் உள்ளங்களைக் களர் நிலம் என்றும், கல்வி உடைய பெண்களை நஞ்செய் நிலம் என்றும் கருதுவர் பாரதிதாசன். கல்வியில் லாத பெண்கள் களர்கிலம்! அங்கிலத்தில் புல்விளைந் திடலாம், கல்ல புதல்வர்கள் விளைவதில்லை! பெண்கள் தாயாக, பொறுமை நிறைந்தவளாக, நல்ல மனைவியாக, தேர்ந்த அமைச்சராக விளங்குதலை, பெண்கள் இட்ட பிச்சைதான் ஆண்கள் பெற்றஇன்பம் அனைத்தும்-அழகிய பெண்கள் இட்ட பிச்சைதான் கண்ணைக் கவர்வார் எண்ணம் கவர்வார் - *. காதலால் இன்ப வாழ்வளித்திடும்-பெண்கள் இட்ட - பிச்சைதான் அன்னை தயை உடையார்-பணிவினில் அடியவர் போன்றார்-மலர்ப் பொன்னின் அழகுடையார் பொறுமையில் பூமிக்கிணை ஆவார் ■