பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெபா. 8.31 இன்பம் அளிப்பதில் தாசிகள்-அவர் எண்ணம் அளிப்பதில் அமைச்சர்கள்-அழகிய பெண்கள் இட்ட பிச்சைதான் என்று குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். பெண்ணின் அழகினைப் பாரதிதாசனார் போன்று ஒரே அடியில் வருணித்து இருப்பதை எக் கவிதையிலும் பார்க்க (tԲւգ.Այո՛5). மின்னலிடை கன்னல்மொழி இன்னும் சொன்னால் விரியுலகில் ஒருத்தி நீ அழகின் உச்சி என்று கூறியிருப்பதனைக் குறிப்பிடலாம். இதையே சற்று விரிவாக, தேனைப்போல் மொழியுடையாள்; அன்றலர்ந்த செந்தாமரை போல் முகத்தாள் கெண்டை மீனைப்போல் விழியுடையாள் விட்டதிர்ந்த மின்னைப்போல் நுண்ணிடையாள் கொண்ட வானைப்போல் உயர்வாழ்வு வாய்ந்தாள் என்று குறிப்பிட்டுள்ளார். பெண்ணைக் கவிதையாகக் கொண்டு போற்றிவரும் பாவேந்தர் என்று குறிப்பிடலாம், குப்பன் என்னும் இளைஞன் பெண்பால் உள்ளத்தைப் பறிகொடுத்துக் காதல் வயப்ட்ட நிலையினை, தாமரை பூத்த குளத்தினிலே முகத் தாமரை தோன்ற முழுகிடுவாள்-அந்தக் கோமளவல்லியைக் கண்டுவிட்டான்-குப்பன் கொள்ளை கொடுத்தனன் உள்ளத்தினை-அவள் தூய்மை படைத்த உடம்பினையும்-பசுக் தோகை கிகர்த்த நடையினையும்-கண்டு