பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பாரதியும் பாரதிதாசனும் காமனைக் கொல்லும் கினைப்புடனே-குப்பன் காத்திருந்தான் அந்தத் தோப்பினிலே என்று வருணித்துள்ளார். ஆணும் பெண்ணும் காதலின் தலைவாசலை மிதித்து நிற்கும் காட்சியினை உளவியல் நுட்பத்தோடு பாரதிதாசனார் புலப்படுத்தும் பாங்கு தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். கூடத்திலே மனப்பாடத்திலே-விழி கூடிக்கிடந்திடும் ஆணழகை ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால்-அவள் உண்ணத் தலைப்படு நேரத்திலே பாடம் பிடித்து நிமிர்ந்த விழி தன்னில் பட்டுத் தெறித்ததுமானின் விழி ஆடை திருத்தி நின்றாள் அவள்தான்-இவன் ஆயிரம் ஏடு திருப்புகின்றான். பெண். சமுதாயத்தில் பெறும் அழகினை என்ன வியப்பிது? வானிலே-இருந் திட்டதோர் மாமதி மங்கையாய் என்னெதிரே வந்து வாய்த்ததோ?-புவிக் கேதிது போலொரு தண்ஒளி மின்னற்குலத்தில் விளைந்ததோ?-வான வில்லின் குலத்திற் பிறந்ததோ? கன்னல் தமிழ்க்கவி வாணரின்-உளக் கற்பனையே உருப்பெற்றதோ? ஒரு பொன்னின் உருக்கிற் பொலிந்ததோ? ஒரு பூங்கொடியோ? மலர்க் கூட்டமோ? என்று வருணித்துள்ளது வியப்பினை விரித்துக் காட்டுவன வாகும். காணுகின்ற பொருள் எல்லாம் பெண்ணைக் காண்பது என்றநோக்கு எல்லாம் அவையே போல்’ எனும் இலக்கண மரபைப் பின்பற்றியுள்ள பாவேந்தர்,