பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&.tum. 233 ஏட்டினில் கவிதை தன்னில் இவளைத்தான் காணுகின்றேன் கூட்டினிற் கிளியும் வானில் குளிரிளம் பிறையும் என்றன் வீட்டினில் திருவிளக்கும் அவள்எழில் விளக்கல் அன்றிக் காட்டவே இல்லை ஒன்றன் கவலைக்கு மருந்து நெஞ்சே என்று குறிப்பிட்டு இருப்பது சங்கத் தமிழ்ச் சாயலின் சார்புடைத்ததாகும். பெண்கள் உள இயலின் நுட்பத் தினை, போகுமட்டும் பூரிப்பாள் போகவிடை பெற்றுப்பின் ஏகுமட்டும் பின்னழகு பார்த்திருப்பாள் யான் திரும்பித் தோகையினை மட்டாக நோக்கினால் தான் குனிந்து சாகுமட்டும் நாமறவாப் புன்னகையைச் சாய்த்திடுவாள் என்ற பாட்டின் அடிகளில் நயமுறக் குறிப்பிட்டுள்ளார் . மேலும் கவிஞர் அவர்கள் 睡 睡 靼 睡 轟 睡 கிமிர்ந்தே அன்னோன் ஒளிமுகத்தைப் பார்த்திடுவாள்; குனிந்து கொள்வாள் சின்னவிழி ஒளிபெருகும் இதழ் சிரிக்கும் திருத்தமுள்ள ஆடைதனைத் திருத்திக் கொள்வாள் என்ற பாடல் அடியில் பெண்களின் மன நுட்பத்தினை வடித்துக் காட்டுகின்றார். குழந்தை மனத்தின் கொடுமை யினை, கூவத் தெரியாக் குயிலின் குஞ்சு தாவாச் சிறுமான் மோவா அரும்பு என்று குறிப்பிட்டு இரக்க உணர்வினைப் புரிகின்றாற்போல் பாடுகின்றார்.