பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கவிஞர் மன்னர் மன்னனின் 'கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல் நூல் அறிமுகம் தமிழிலக்கிய வரலாற்றில் சிறப்பான, நிலையான இடம் பெற்றவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். புதுச் சேரியில் பிறந்து வாழ்ந்த பாவேந்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை அவரது மகன் மன்னர் மன்னன் பல ஆதாரங்களைக் கொண்டு 'கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல் என்ற நூலாக எழுதியுள்ளார். அவர் தாம் திரட்டிய கருத்துகளை 1. பழமைச் சோலையில் மழலைக்குயில், 2. சிறைக்குள் சென்றது. செவ்வாய்க்குயில், 3. அடிமை நிலை நீக்கிய ஆசிரியக்குயில், 4. கப்பிரமணியக் குயில் வியந்த கப்புரத்தினக் குயில், 5. சிந்தையில் புதுமை கொண்ட செந்தமிழ்க் குயில், 6. கூடு கட்டத் தெரியாத கொள்கைக்குயில், 7. புல்லுருவிகளை விரட்டிய புதுவைக் குயில், 8. சொற்கிழி பெற்றுப் புகழ் ஈட்டிய புரட்சிக் குயில், 9 நெருப்புக் குரல் கொடுத்த கறுப்புக்குயில் என்ற ஒன்பது தலைப்புகளில் செவ்வனே நிறைவுபடத் தந்துள்ளார். பாவேந்தரின் வாழ்க்கையில், 54 ஆண்டுக்கால வரலாற்றைச் சொல்வதாக இந்நூல் அமைந்துள்ளது. இதுவரையில் வெளிவராத பாவேந்தரின் அரிய நல்ல கவிதைகள் எல. இந்நூலில் வெளிக்கொணரப்பட்டுள்ளன. மன்னர் மன்னன் அவர்கள் தமிழ்ப் புலமையோடும், எழுத்தாற்றல் வன்மையோடும் இந்நூலை இயற்றி