பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.38 பாரதியும் பாரதிதாசனும் யுள்ளார். இருபது ஆண்டுகள் திரட்டிய செய்திகளையும், குறிப்புகளையும் நிழற்படங்களையும் நிரல்படத் தந்துள்ளார். இந்நூல்வழித் தெரியலாகும் பாவேந்தரின் பண்புநலன்களை இவண் காணலாம். 1. இளமை வாழ்க்கை 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 29ஆம் நாள் புதுவையில் கனகசபை, இலக்குமி அம்மாள் ஆகியோரின் திருமகனாகச் சுப்புரத்தினம் பிறந்தார். கனகசபை அவர்கள் செல்வ வாணிகர்; சோதிட நூலறிவு உடையவர். கனகசபையார், ஏற்றுமதி, இறக்குமதி வாணிபத்திலும் இறங்கி அயல்நாடுகட்கு வெங்காயம், மணிலா போன்ற சரக்குகளை ஏற்றுமதி செய்து, பெரும் பொருள் திரட்டினார். ஆயின் வாணிபத்தில் பெருந் தொகை இழப்பானதால் வறுமை நிலையையடைந்தார். சின்னஞ்சிறிய பருவத்திலே சுப்புரத்தினம் கல்வியில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். கூரிய அறிவு படைத்த வராகவும் காணப்பட்டார். தம்மின் மூத்தவரான சுப்பராயனைவிட மிகச் சுறுசுறுப்பாகவும் காணப்பட்டார். அக்காலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடங்களே மிகுதி. அவை அனைத்தும் தனியார் பள்ளிகள். அந்த வட்டாரத் தில் புகழ்பெற்று விளங்கிய திருப்புலிச்சாமி அய்யா என்பார் நடத்திய திண்ணைப் பள்ளிக்கூட மாணவரா னார். அய்யா அவர்கள் வைணவச் செம்மல்; தம் பள்ளி மாணவர்கட்குத் திருப்பாவை கற்பித்து மார்கழித் திங்களில் விடியலில் பஜனை நடத்தும் வழக்கம் உடையவர். புதுவையில் சிறப்பு மிகுந்த மாசி மகம்' திருவிழாவில் இப்பாடற்குழு ஊரெங்கும் பாடி வரும்.