பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F. curr. so B9 திருப்புலிசாமி அய்யாவின் குழுவிற்கு மக்களின் பாராட்டுக் கிடைக்கத் தொடங்கியது. இதற்குக் காரணம் குழுவின் சட்டாம்பிள்ளை சுப்புரத்தினத்தின் கலை ஆர்வம்தான் என்பதை 'அய்யா குறுகிய காலத்தில் கண்டுகொண்டார். கலையார்வம் மிக்க சுப்புரத்தினத்திற்கு இலக்கிய இலக்கண அறிவைப் புகட்டுவதில் தனிக்கவனமும் செலுத்தினார் அய்யா. இதற்கேற்ப, சுப்புரத்தினமும் தலைமானாக்கராக விளங்கினார். ஆயுத பூசை" "சரஸ்வதி பூசை முதலிய விழாக் காலங்களில் நாடகங் களை நடத்திப் புகழ்பெற்றது திருப்புவிசாமி அய்யா திண்ணைப்பள்ளி. இதிற் பெரும்பங்கு சுப்புரத்தினத்திற்கு உண்டு. திண்ணைப் பள்ளியில் தமிழில்தான் பாடங்கள் நடைபெறும். ஆட்சிமொழியான பிரெஞ்சு, உயர்நிலை வகுப்பில்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் திண்ணைப் பள்ளிகூடப் பயிற்சி சுப்புரத்தினம் என்னும் இலக்கிய மாளிகைக்கு அசைக்க முடியாத அடிப்படைக் கல்லாக அமைந்தது. இந்த மாளிகை எழிலோடும் இணையற்ற வலிவோடும் எழும்பிவிட, உயர்நிலைப் பள்ளியில் புலவர் சி. பங்காரு பக்தர் தகுந்த வகையில் துணைபுரிந்தார். கல்வே கல்லூரியில் ஆசிரிய அலுவலுக்குரிய Brevet de Langue rdigene என்ற படிப்புக்கான கல்வியை தொடங் கினார். தமது பதினேழாவது வயது நிறையுமுன்பே சுப்புரத்தினம் தேர்வு எழுத நேர்ந்தது. உயர்நிலைப்பள்ளி பயிலப் புதுவை அரசின் நீதிஉதவிபெறும் தகுதி மிக்க மாணவர் சுப்புரத்தினம், தேர்வு எழுதிய நாற்பது மாணவரின் முதல்வராக மதிப்பெண் பெற்றுத் தேர்ந்தார். சாரம் மகாவித்துவான் பு. அ. பெரியசாமிப் பிள்ளை என்பார் வீட்டுக்குச் சென்று இலக்கியம் பயின்றார்.