பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 - சாரதியும் பாரதிதாசனும் பெரியசாமி அவர்கள் சுப்புரத்தினத்தின் இலக்கியப் aயிருக்கு வான்மழையாக வாய்த்தார். அவருக்குத் தம் வீட்டிலிருந்து தலைமுழுக எண்ணெய் எடுத்துக் கொண்டுபோய்க் கொடுப்பதுவழக்கம். இவ்வாறாகக் கல்வி கற்று, ஆசிரியப் பணிக்குத் தகுதி பெற்றார் கனகசுப்புரத்தினம். 2. ുങ്ങി பதினெட்டு வயது நிறைவு பெறாதவர்களுக்கு அலுவல் அளிக்க அரசின் விதிமுறை இடம்தாவில்லை. இதனால் இவருக்கு அலுவல் வழங்க அரசு மறுத்தது. இதையறிந்த புள்ளப்பாவு என்பார் கல்வியதிகாரி கய்யார் என்பவரிடம் எடுத்துரைத்ததன் மூலம் 20-7-1909இல் நிரவி என்னும் சிற்றுார்ப் பள்ளியில் தமிழாசிரியப் பணி சுப்புரத்தினத்திற்கு அளிக்கப் பெற்றது. | விசுவலிங்கம் பிள்ளை என்ற முதியவர் நிகழ்த்திய திருவிளையாடற் புராண விரிவுரையில் ஏற்பட்ட தவற்றை உள்ள உறுதியுடன் சுட்டிக்காட்டினார் சுப்புரத்தினம். அரசியல் துறையினர். அலுவல் துறையின ரால் அவருக்கு அடிக்கடி இடமாற்றம் தரப்படுவதுண்டு. ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் மாண்வர் களிடம் அன்புடனும் கண்டிப்பாகவும் நடந்துகொள்வார் சுப்புரத்தினம். முரட்டுத்தனமுள்ள மாணவர்களும் கவிஞரிடத்தில் அடங்கி நிற்பார்கள். மாணவர்களை முறைப்படுத்தி நடத்தும் கவிஞர் மாணவர்களின் குறைகளைக் களையவும் பள்ளி நிர்வாகத்துடன் போராடுவார்.