பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ßwtr. - 24፤ ஒருநாள் பகல்வேளை உணவிற்குச் சுரைக்காய் அம்பாா:பரிமாறப்பட்டது. அது கசப்பாக இருப்பதை அறிந்த கவிஞர் உடனே மாணவர்களைக் கல்வி அதிகாரி அளிடம் அழைத்துச் சென்று, அவரிடம் முறையிட்டார். நிகழ்ச்சியை விவரமாகக் கேட்ட கல்வியதிகாரி, வெண்டுவன செய்யத் தம் உதவியாளருக்குக் கட்டளை பிறப்பித்துவிட்டுத் தலைவர் மிகப் பரிவோடு; "மப்புரத்தினம், உங்களின் கடமை உணர்வை நான் பrராட்டுகின்றேன்.வகுப்பறைக்கு வந்துவிட்டுப் போவதும் சம்பளப் பட்டியலில் கையெழுத்துப் போடுவதும்தாம் ஆசிரியர் தொழில் என்றில்லாமல் அடிப்படைத் அத்துவத்தை மறந்துவிடாமல் அதனை நன்றாகப் புரிந்துகொண்டு பொது நோக்குடன் நீங்கள் பணிபுரிவதை நான் போற்றுகிறேன். மாணவர்களின் நன்மை பேணும் நேர்மை உங்கட்குப் புகழைத் தரும்" என்று கூறிப் பாராட்டினார். இந்நிகழ்க்சி அவரின் பணிநேர்மையையும், அஞ்சாமையையும் எடுத்துக்காட்டி அவரைச் சிறப்புமிக்க ஒரு நல்லாசிரியராகக் காட்டுகிறது. கரும்பலகையில் மிக அழகாக எழுதுவார். நாள் தோறும் நன்மொழி எழுதுவதிலும் புதுமை இருக்கும். ஒப்புக்கு எதையாவது எழுதிவிடுவது இவருக்குப் பிடிக்காது. சொந்தமாக நல்ல கருத்தை எழுதுவார்.கரும் பலகையில் பாடத்துக்கு ஏற்றபடி அழகிய ஓவியம் எழுதி மாணவர் ளை ஈர்ப்பதில் இவர் வல்லவராக விளங்கினார். "எல்லோருக்கும் கல்வி என்ற கொள்கைக்கிடையே பொருளாதாரமோ, மதமோ, சாதியோ குறுக்கிடலாகாது. இதனைத் தம் இலட்சியமாகக் கொண்டார். இவரது பணி விவரம் வருமாறு: kurrstarr.–16