பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பாரதியும் பாரதிதாசனும் 16.7.1909 நிரவி அரசினர் பள்ளி; 12.1.1912 புதுவை சார்ந்த முத்திரைப்பாளையம் பள்ளி; 29.6.1914 கூனிச்சம்பட்டு; 29.3.1916 வில்லியனுrt; 7.7.1916 ஆலங் குப்பம்; 11.4.1917 திருநள்ளாறு: 27.9 1918 திருபுவனை: II. II. 192I திருமலைராயன்பட்டினம்; 13, 8, 1924 புதுவை முத்தியால்பேட்டை 17.8.1926 புதுவை மாதா கோயில் தெருப் பள்ளி; 26.11 1931 புதுவை கயர்கூப் வீதி பள்ளி; 10.8.1934 கூனிச்சம்பட்டு; 19.9.1935 நெட்டப் பாக்கம்; 5.1.1939 புதுவை சுயர்கூப் வீதி பள்ளி; 26.7.1944 புதுவை மாதாகோவில் தெரு உயர்நிலைப் பள்ளி: 7.11.1946 பணியிலிருந்து ஓய்வு பெறுதல். மொத்தம் அலுவல் பார்த்த ஆண்டுகள்: 37-திங்கள் 3-நாட்கள் 20. இவ்வாறு அஞ்சாநெஞ்சம் கொண்ட தமிழாசிரியராகவும், சிறந்த நல்லாசிரியராகவும் திகழ்ந் தார் கவிஞர். 3. அஞ்சாநெஞ்சம் அச்சமில்லை அச்சமில்லை என்று அஞ்சாக்குரல் எழுப்பியவர் பாரதியார். அவர் வழிநடக்கும் பாரதிதாசன் அஞ்சாநெஞ்சம் கடைத்தவராகவும், உள்ள உறுதி கொண்டவராகவும் விளங்கினார். சிறுவயதில் குறும்பு காரணமாக அவரை யாருக்கும் பிடிக்காது. அவருக்கு ஆதரவாக இருந்தது. தந்தையின் நடுநிலைமைக்குக் குணம் ஒன்றுதான். குடும்பத்தில் தனக்கெதிராகச் செய்யப்படும் செயல்களைத் தந்தையிடம் கூறிவிடுவார் பாவேந்தர். சிறுவயது முதல் அஞ்சாநெஞ்சத்துடன் விளங்கினார் கவிஞர்.