பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

И).tлт 243 முன்னர்க் குறிப்பிட்டவாறு மதிய உணவு சரியில்லா ததைக் கல்வியதிகாரியிடம் முறையிட்டு ஆவன செய் தார். அதுபோன்றே ஒருமுறை, பள்ளித் தலைமை யாசிரியர் கல்வியதிகாரிக்கு அன்பளிப்புச் செய்ததாகக் கூறி, இவரது ஊதியத்தில் சிறுதொகையைப் பிடித்திருந் தார். அதைக் கல்வித்துறைத் தலைவரிடம் முறையிடு வதாகக் கூறிக் கூச்சலிட்டார் கவிஞர். உடனே முழு ஊதியமும் அளிக்கப்பட்டது. இங்கிலாந்தின் சக்கரவர்த்தி பற்றிய பாடத்தை வகுப்பில் நடத்த மறுத்து, நீதி பெற்ற அஞ்சா நெஞ்சினர் பாரதியார். வெள்ளை அரசினரை எதிர்த்துப் பாப் புனைந்தார். வெள்ளையர் ஆட்சியை நோயாகக் கருதி அதனை ஒழித்திடப் போர்ச்சங்கு ஊதுகின்றார் கவிஞர். 4. தமிழ்ப்பற்றும் நாட்டுப்பற்றும் சிறந்த நாட்டுப் பற்றாளராகவும், தமிழ்ப் பற்று மிக்கவராகவும் விளங்கினார் பாரதிதாசன். இங்கிலாந்து நாட்டின் சக்கரவர்த்தி பற்றிய பாடத் தைக் கற்பிக்க மறுத்து நாய்ப்படத்தை வரைந்து விளக் கினார் கவிஞர். அதைக்கண்ட தலைமையாசிரியர், ஏன் நாய்ப்படத்தை வரைந்தீர்கள் எனக் கேட்டதற்கு, பிறந்த நாட்டுக்கு ஒவ்வாத கருத்துகளைக் கூறுபவர்களை விட, நாயின் படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவனே சிறந்தவன் என்று கூறினார் கவிஞர். இழிவைத் துடைப்பது அறிவை வளர்ப்பதுதாயகப் பற்றை-தாய்மொழிப் பற்றை ஊட்டுவது இவை யாரோ சிலரின் வேலையன்று. அது ஆசிரியரின் தலையாய கடன்; அரசின் நீங்காத பொறுப்பு: கவிஞரின் முதல் வேலை.