பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 toዐ”ዐ தியும்,பாரதிதாசனும் இந்தப் பொறுப்புணர்ச்சிகளைச் சரிவர நிறைவேற்றச் செய்வதில் புரட்சிக் கவிஞர் ஈடுபட்டார். வெற்றி பெற்றார். - தமிழாசிரியராக வேலைபார்த்த கவிஞர் காந்தியடி களைப் புகழ்ந்தும் கதர்த் திட்டத்தைப் போற்றியும் பாடினார். * தாய்நிலம் போய் மற்றவரைத் தலை வணங்கலாமே? தன் தலை வணங்கலாமோ...... என்ற விர்ச்சுவை பொதித்த பாடலைப் பாடினார் கவிஞர். தமிழ்மொழி வளர்ச்சி குறித்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு அவர் அளித்தப்தில் அவரது ஆழ்ந்த தமிழ்ப்பற்றை விளக்குவதாக அமைந்திருக் கின்றது. பள்ளிக்கூடத்திலே எல்லாப் பாடங்களையும் தமிழிலே படிப்படியாகச் சொல்லித்தர ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்பது அப்பதிலாகும். பாரதிதாசனுக்குத் தமிழன்பு மிக அதிகம். உலகத் துக்குப் பொதுமொழி தேவை என கருதும் பாரதிதாசன், இந்தியாவிற்குப் பொதுமொழி கூடாதென்கிறார். தமிழ் நாடு மிகத் தாழ்வான நிலைமையிலிருக்கின்றதென்றும், பிறமொழிகள் இங்கு ஆதிக்கம் பெற்றால், தமிழ்நாட்டின் முன்னேற்றம் தடைப்படும் என்றும் அவர் அஞ்சுகின்றார். இதனால் மொழி வாழ்வில் இன்றியமையாப் பங்கு கொண்டுள்ளது என்ற கருத்துவெளிப்படக் காணலாம்.