பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6*.com, 245 தமிழிசை பரப்புத் தொண்டில் அவரது பணி குறிப் பிடத்தக்க இடம் பெறுவதாகும். பாடல்களைப் பிழை யில்லாமல் அசிசிடவேண்டும் என்ற உறுதியான எண்ணம் கொண்டவர் பாரதியார், மதுரையில் வடமொழிப் பெயர்களையும் பெயர்ப்பலகைகளில் இலக்கணப் பிழையுள்ள சொற்றொடர்களையும் கண்டு கவிஞர் மனம் வெதும்பி ஒரே இரவில் தமிழியக்கம் எழுதி முடித்தார். இந்த எழுச்சி மிக்க நூல் தமிழ்நாட்டில் மொழியுணர்வைத் தீயாக்கி விட்டிருந்தது. 5. பாரதி பற்று பார்ப்பனரல்லாதார் பிரச்சனையில் பாரதிதாசன் கருத்துக்குப் பாரதியார் ஆதரவு அளித்ததே, பாரதியிடம் அவருக்கு மதிப்பு ஏற்பட்டதற்கு முக்கிய காரணமெனக் கவிஞர் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அம்மாக்கண்ணு மகனான வேணுநாயகர் திருமணப் பகல் விருந்து முடிந்து நண்பர்கள் உரையாடிக் கொண்டி ருந்த போது, பொழுது போக்காகப் பாடல் ஒன்றைப் பாடினார் சுப்புரத்தினம். பாரதியாரின் வீர சுதந்திரம் வேண்டி நின்றார் என்ற பாடலைச் சுப்புரத்தினம் பாடியது எல்லோருக்கும் இனித்தது. தமது பாடலை மிக இனிமையாகவும் சொற் பிழையின்றியும் உணர்வு குன்றாமலும் பாடிய இளைஞரைப் பற்றி விவரம் அறிந்த பாரதி, சுப்புரத்தினத்தைதி தம் வீட்டிற்கு வந்துபோகும் வடி அழைத்தார். பாரதியாரின் வீட்டுக்குச் சுப்புரத்தினம் செல்லும்போது, தாம் எழுதிய பாடல்களைப் பெயர்த்து எழுதச் சொல்லுவார் பாரதியார். பாரதியார் இருக்கு மிடம் சங்கப் பலகையாகவே மாறிவிடும். உரையாடலில் நேரடியாகத் தலையிடாமல் உற்றுநோக்கியிருப்பார்