பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பாரதியும் பாரதிதாசனும் சுப்புரத்தினம். பாரதி எழுதும் சிறிய கணக்குப்பிள்ளை மேசை எதிரில் எதனையோ எழுதிக்கொண்டிருந்த சுப்புரத்தினத்தின் போக்கைக் கவனித்த குயில் சிவா கிண்டலாக ஏதோ கூறினார். இதனைக் கேட்டபாரதியார், "சுப்புரத்தினம் கவி எழுதக்கூடியவன்" என்று கூற. பாவேந்தர் "எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற பதினாறு அடிப்பாடலை எழுதி முடித்துப் பாடிக் காட்டினார். 18 வயதுடைய தமிழாசிரியர் சுப்புரத்தினம் பாட்டின் பொருளும், பாடிய குரலும், பண்ணும், பாரதி யாரை மகிழ்ச்சிக் கடலில் தள்ளின, நண்பர்கள் வியப்பில் துள்ளினர். இந்தப் பாடலைப் பாரதியார் தம் கையாலே பெயர்த்தெழுதி "பூரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது" என்று குறிப்பெழுதிச் சுதேசமித்திரன் நாளிதழுக்கு அனுப்பிவைத்தார். வேறு எவருக்கும் பாரதியார் இப் படிப்பட்டதோர் அறிமுகத்தைச் செய்து வைக்கவில்லை என்பதோடு 1918ஆம் ஆண்டில் புதுவையை விட்டு புறப்பட்டுச் சென்றது வரையிலான பத்தாண்டுக் காலத் தில் பாரதியாரின் புது நடையைத் தமது நடையாக ஏற்றுக் கொண்டதேயன்றி, பாரதியின் நண்பனாக, அமைசிசனாக, மெய்க்காப்பாளனாகச் சுப்புரத்திதனம் மிளிர்ந்தார். இவ்வாறு பாரதியாரால் மதிக்கப்பட்டுப் பாராட்டப்பெற்ற பாவேந்தர் 1935இல் தான் வெளியிட்ட கவிதை ஏட்டிக்கு "பூரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்' என்ற பெயரையே இட்டார் என்பதால் பாரதியார்பால் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அன்புபக்தி புலனாகும்.