பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&. turr. 247 பாரதிதாசன் எனப் புனைபெயர் சூ ட் டி. க் கொண்டதைப் பற்றியும், பாரதியிடம் தமக்கேற்பட்ட ஈடுபாட்டிற்குரிய காரணம் குறித்தும் "குயில்" இதழுச் காக இப்படி எழுதினார் பாவேந்தர். 'நான் பாரதிதாசன் என்று ஒரு புனைபெயரை வைத்துக் கொண்டுள்ளேன். அதற்குக் காரணம். அப்போது அவர் என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான். சாதிக் கொள்கையை நன்றாகஉண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தாம். அவருக்கு முன் பன்னுாற்றாண்டுகளுக்கு முன் அவ்வாறு சாதிக் கொள்யையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட் களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது. காரதியாரை நான் ஆதரித்ததும், பாரதிதாசன் என்று நான் புனைபெயர் வைத்துக்கொண்டதும், ஏதாவதொரு கூட்டாத்தாரிடம் நன்மையை எண்ணியன்று. சாதி ஒழிப்பு விளம்பரம் ஆதல் வேண்டும் என்பதற்காகவும், பாரதியாரைப்போல எ வரி)ய நடையில் மக்களுக்கு இன்றைக்கு வேண்டிய கருத்தை வைத்துப் பாடல் இயற்றவேண்டும் என்பதைப் புலவர்க்கு" நினைவூட்ட வேண்டும் என்பதற்காகவுமே! என 1961 இல் பாரதிதாசன் தம் உள்ளத்தை வெளி யிட்டிருக்கின்றார். மேலும் பாரதியைப் பாரதிதாசன் சிறப்புறுத்திக் காட்டியிருப்பதுபோல் எவரும் காட்டிய தில்லை இவ்வாறான உறவு பாரதியாருக்கும், பாரதிதாச னுக்கும் பல்லாண்டு காலம் நீடித்து உரம் பெற்றது.