பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பாரதியும் பாரதிதாசனும் 6. திராவிட இயக்கப் பங்கு இளமையில் ஆழ்ந்த கடவுள் பக்தராக விளங்கியவர் பாவேந்தர், முன்னர்க் குறிப்பிட்டபடி மrசிமகத்தன்று ஊரெங்கும் பாடற்குழுவோடு பாடிப் பெயர் பெற்றவர். மைலம் சுப்பிரமணியர்மீது பக்திப் பெருக்கால் பாமாலை புனைந்து சூடுாைர். அவர் முதன்முதல் பாடிய பாட்டு கப்பிரமணியர் துதியமுது. 1926 இல் புத்தகமாக வெளி வந்தது. பாரதியார் பாப்புனையச் சொன்னபோதும் கூட ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற இறைப் பாடலையே பாடினார். பல்லாண்டுகளாக மக்களின் இரத்தத்தோடு கலந்து போயுள்ள அறியாமை, அடிமைத்தனம், சாதிமதம், கடவுள் பெயரால் விளைந்துள்ள சமூகக் கேடுகள் ஆகியவற்றைக் களைந்தெறிந்து, மக்கள் வாழ்வுக்குப் புத்துலகம் சமைக்க வழிகோலின சுயமரியாதைக் கொள்கைகள். இதனால் திராவிட இயக்கத்தில் தீவிரப் வங்கு கொண்டு பாடல்கள் எழுதினார். இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற நாடகத்தை எழுதினார். அதைப் பாராட்டி அவருக்குப் பச்சை சால்வை அளித்தனர். பாரதிதாசனின் சீர்த் திருத்தக் கவிதைகள் உருவாகுவதற்குச் சாதிமத எதிர்ப்பும், சுயமரியாதை இயக்கமும், சூழ்நிலையும், பின்னணிகளாக அமைந்தன. மூடத் தனத்தின் முடை காற்றம் வீசுகின்ற காடுமணக்க வரும் கற்பூரப் பெட்டகமே என்று தாலாட்டுப் பாடலில் பாடினார் பாவேந்தர்.