பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.cат. 249 புதுவைக்கு வந்த பெரும் தேசியத் தலைவர்களான கோகலே, திலகர், தாஸ், காந்தி, நேரு ஆகியவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு பாரதிதாசனுக்குக் கிடைத்தது. அரவிந்தர், வ.வே.சு. ஐய?, கப்பிரமணிய பாரதியார், வ.உ. சிதம்பரம்பிள்ளை முதலியவர்களிடம் பாரதிதாசன் பல ஆண்டுகள் நெருங்கிப் பழகினார். சுயமரியாதை வீரராக விளங்கும் பாரதிதாசன், 1920ஆம் ஆண்டில் சத்தியாக்கிரக இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார். 7. சமுதாய சேவை சிறந்த ஆசிரியராகவும், நாட்டுப் பற்றாளராகவும் பகுத்தறிவுவாதியாகவும் விளங்கிய பாவேந்தர் சிறந்த தன்னலங் கருதாச் சமூகத் தொண்டராகவும் விளங்கி வந்துள்ளார். கல்வியென்பது அனைவருக்கும் பொதுவானது என்ற கருத்தை வலியுறுத்தி, அதைப் புதுச்சேரி அரசை ஏற்கச் செய்தார். மூட நம்பிக்கையில் மூழ்கி உழன்று திரிந்த மக்களுக்கு அறிவுரைகள் வழங்கி அவர்களை நல்வழிப்படுத்த முயன்றார். பொதுச் சொத்துகளைப் பாதுகாத்துப் பேன வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். புயலில் சிக்கித் தவித்த ஏழை மக்களுக்கு ஊராட்சி சார்பில் துயர் துடைப்புப் பணி உடனே நடைபெறச் செய்ய, அதன் தலைவரிடம் வற்புறுத்தி வெற்றியும் பெற்றார். மண் அடித்துவிட்ட நன்செய் நிலங்களுக்கு வரித் தள்ளுபடியும் அளிக்கப்பட வேண்டும் எனப் புதுவை