பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பாரதியும் பாரதிதாசனும் அரசியல் கட்சித் தலைவரிடம் வலியுறுத்தினார் பாவேந்தர். 'இசையமுது முதற்பகுதியில் வருகின்ற வண்டிக் காரனும், ஆலைத் தொழிலாளியும், குறவனும், பல்வேறு உடல் உழைப்பாளர்களும் பாவேந்தரின் உள்ளத்து ஒலிகள்! சமுதாயம் இவர்களை ஏறெடுத்தும் பார்க்காத போது இவர்கட்கும் மாந்தர் உணர்வுகள், பண்புகள் உண்டு என்று நிலைநாட்டத் துடித்த உள்ளம் பாவேந்தரு டையது. அந்தத் துரங்காத உள்ளம் செயலாற்றியதன் விளைவுதான் இன்றைய சமுதாயத்தின் வெற்றிகள். பிற இகின்பாதம்ஸ் போன்ற புத்தகம் விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு முதன்முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்ப் புத்தகங்கள் கவிஞருடையவை தான். இழிவு ஒன்று காணின் அதன் சல்லிவேரையும் கிள்ளி எறிவதில் ஏற்படும் இன்னல் எதுவாயினும், கொண்ட கொள்கையில் இம்மி பிறழாமல் விாழ்வதும் அவருள் ஊறிப்போன வழக்கம். பாரதிதாசன் என்ற பெயர் இவருக்குப் பல வகை களில் நன்றாய்ப் பொருந்தும். இவர் கவிதையின் குணம் ஒரு வேகம். இவர் இலக்கணக் கவியல்ல, ஆவேசக் கவி. கவிந்திருக்கும் ஒரு குடைகீழ் உள்ளவரில், சிலரிக்கு நிழல், சிலர்க்கு வெயிலோ? இந்தக் கேள்விதான் 'கறுப்புக் குயிலின் நெருப்புக் கவிதை. இனிய குரலில் தானே பாடும் குயில்?