பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፴.twfየ. 251 இந்தக் குயில், தமிழ்ச் சங்கத்தில்-தமிழ் இனமான உணர்களைத்தான் எழுப்பும். நூற்றாண்டு விழாக் காணவிருக்கும் பாவேந்தரின் 54 ஆண்டுக்கால வரலாற்று நிகழ்ச்சிகளை மன்னர் மன்னன் அவர்கள் இனிதே விளக்கியுள்ளவாறு இதுவரை கண்டோம். இந்நூல் ஆசிரியர் பாவேந்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை, படிப்போர் உள்ளம் மகிழுமாறு உருகுமாறு செம்மையாக, நாவல் நடையில் எழுதியுள்ளார். இந்நூல் பாவேந்தர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பலவற்றைக் கொணர்ந் துள்ளது. இது பாவேந்தர் பற்றிய ஆய்வுக்கு உறுதுணை யாக அமையும்.