பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பாரதியும் பாரதிதாசனும் பாரதிதாசன் கவிதைகள் : 2 மல்லிகையின் அரும்புபோல் அலகும், நல்ல மாணிக்க காலும்மணி விழியும் பால்போல் துல்லியவெண் சிறகும் உற்ற பெண்பு றவாய்த் துலங்கினாள் -- - கற்பனை உலகம் : 4 எதிர்பாராத முத்தம் தணலிலே கின்றிருப்போர் தண்ணீரில் தாவுதல்போல் எழுத்தினை விழிகள்தாவ இதயத்தால் வாசிக்கின்றான் –8 : 2, 3 இனிச் சீர்திருத்த நோக்கில் இருவரும் எவ்வாறு திகழ்கின்றனர் எனக் காண்போம். கல்விப்பணி குறித்த பாரதியின் கருத்துகள் வருமாறு: இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் இனிய கீர்த்தண் சுனைகள் இயற்றல் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம்பதி னாயிரம் காட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல் -பாரதி வெள்ளைத் தாமரை 9 உயிர்களிடத்தில் அன்பு வேணும்;-தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும் :வயிர முடைய நெஞ்சு வேணும்...இது வாழும் முறைமையடி பாப்பா! - பாப்பா பாட்டு : 16